திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Friday, June 13, 2008

ஆத்தா .....நான் குண்டாயிட்டேன்!!!!!!!!!!!!

ஏங்கண்ணே அப்படி பாக்கரீங் பாஸாயிட்டா மட்டுந்தான் சந்தோசப்பதுணுமாங் குண்டாயிட்டா சந்தோசப்படவேண்டாங்களா?

அம்மா நான் வளர்ந்துட்டேன் மம்மின்னு காம்ப்ளான் விளம்பர கொழ்ந்தைகள் போல உங்க பேண்ட் உங்களூக்கே டைட்டானா உங்களுக்கான பதிவு இதாங்க.

இருபது வருசமா அம்மா போட்ட சாப்பாட்டை சாப்பிட்டும் ஒல்லிப் பீச்சானாவே இருந்தவங்க பொண்டாட்டி அம்மிணி வந்தப்ப மட்டும் எப்பிடி ஆறு மாசத்துல குண்டாயிராங்கன்னு ஒரு சந்தேகமிருக்குண்ணே, யாராவது சந்தேகத்தை தீர்த்து வைங்கண்ணே.

பின்ன நம்ம சொந்தக்கதை சோகக்கதைக்கு போகலாமாண்ணே கல்யாணம் ஆயி எட்டு வருமாயியும் அப்படியே இருந்தேண்ணே. திடீர்னு ஒரு நாள் டைபாய்டு காய்ச்சன்னு சொல்லி ஆசுபத்திரியில கொண்டு போய் போட்டுட்டாங்கண்ணே, டாகடர் மருந்து சேரல ஊசி போட்டுக்கோண்ணு சொல்லி ஒரு வாரம் ஊசி போட்டு குத்துயிரும் கொலையுயிருமாக்கி அனுப்பறப்ப, வயித்தில புண்ணு காரமாவும், கெட்டியாவும் ஒண்ணும் சாப்பிடவேண்டாம், சும்ம்மா பதினஞ்சு நாளு ரெஸ்ட மட்டும் எடுத்துக்கோங்கண்ணுட்டு அனுப்பிட்டாரு. டாக்டர் சொன்னாரேனுட்டு வீட்டுலையே இருந்து வெறும் இடியாப்பாம் , இட்டிலி, வேக வெச்ச காய்கறின்னு பதின்ஞ்சு நாள் கஷ்டப்பட்டு கஷ்டகாலமேன்னு ஆபீஸ் போறன்னைக்கு பேண்டை எடுத்து மாட்டுனா பத்த மாட்டேங்குது., எப்படியே அட்ஜஸ்ட் பண்ணி மாட்டிகிட்டு ஆபீஸ் போணண்னே, என்னப் பாத்து எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டார்ண்ணே. ஒருத்தர் சப்பி சீக்ஸ்(Chubby cheeks) ன்னு பாட வேற ஆரம்பிச்சாட்டாருண்ணே. அன்னையில ஆரம்பிச்சது இன்னைக்கு என்ன பண்ணுணாலும் ஒடம்பு கொறைய மாட்டேங்குதுங்க , நீங்க தான் ஒரு வழி சொல்லுங்களேண்ணா?

ஒரு மூணு வருசம் கழுச்சு ஒரு நாள் எலெக்ட்ரிக் ட்ரெயினை புடிக்க அவசரமா ஒடி கால் தடுக்கி கீழ விழுந்து காலை ஒடச்சுகிட்டு டாக்டர்கிட்ட போக , அவரும் பெருசா எக்ஸ்-ரே எடுத்து பாத்துட்டு எலும்பு முறிஞ்சிருக்கு மாவுக்கட்டுதான் போடணுன்னு தூக்க முடியாத மாதிரி பெரிய கட்டப்போட்டு வீட்டுக்கு அனுப்பிட்டார்ன்னே, கட்டையை வெச்சுட்டு எங்கண்ணே நடக்கறது, ஒரு மாசம் பாத்ரூம் மட்டும் போயிட்டு பெட்டுலயே உட்கார்ந்துட்டு, காலைல டிபன் சாப்பிடிட்டு, கொஞ்ச நேரம் புத்தகம் படிச்ச்சுட்டு, நல்லா படுத்து தூங்கிட்டு, அப்புறம் மத்தியான்னம் எந்திருச்சு சாப்பாடு சாப்டுட்டு, கொஞ்ச நேரம் டி.வி பாத்துட்டு மறுபடியும் தூங்கிட்டு, ஜாலியா ஆபிஸ் போகாம ஓபி அடிச்சுட்டு ஒரு மாசம் கழிச்சு கட்ட அவுத்துட்டு காலை ஊனுனேங்க எனக்கே நான் பயங்கர வெயிட்டா தெரிஞ்சேங்க. இத்தன நாளா லுங்கியிலயே இருந்துட்டு பேண்டை மாட்டுனா எதுவுமே பத்தலேங்க. அவசர அவசரமா கடைக்குப் போயி புதுப்பேண்டு வாங்கிட்டு போட்டுட்டு ஆபிஸ் போணா யாரும் கண்டுக்கவேயில்லைங்க, பேரை சொல்லி கூப்பிட்டன்னே எல்லோரும் கோரஸ்ஸா அடப்பாவி எப்படீங்க இப்பிடி குண்டானீங்கன்னு மூக்கு மேலே விரலை வெக்கறாங்க.

இன்னோரு தடவை ஸ்கூட்டர்ல போகறப்ப ஒரு கார்க்காரன் வந்து இடிச்சு கால் மேல ஸ்கூட்டர் விழுந்து கால் வீங்கி கட்டு போட்டு ஒரு பத்து நாள் சாப்பிட்டு சாப்பிட்டு பிளாக் பண்ணிகிட்டு உங்கார்திருந்துட்டு போய் வெயிட்டெடுத்து பார்த்தா 4 கிலோ ஏறியிருந்தேங்க.

ஓடம்பைக்குறைக்க ஓடி, நடந்து ஒண்ணும் பிரயோஜனமில்லைங்க, முட்டி தேஞ்சு வலி வந்ததுதாங்க மிச்சம். இப்ப யாராவது சின்னப்பையன் என்னப் பார்த்தா அங்கிள் நீங்க எந்தக் கடையில அரிசி வாங்கரீங்கறீங்கண்ணு கேட்டுடக்கூடாத்ண்ணு பயமா இருக்குதுங்க. அதனால வருத்தப்படாத வாலிபரண்ணங்கலே ஜாக்கிரதையா இருங்கண்ணே இந்த டாக்டக்ர்ககிட்ட. பாக்காலாங்கண்ணே.

உங்களுக்கும் ஏதாவது அனுபவம்னா பகுந்துக்கோண்ணேங்.

3 Comments:

Blogger M.Rishan Shareef said...

அண்ணே..முதல்ல உங்க வீட்டுக்காரம்மிணி காலத் தொட்டு கண்ல ஒத்திக்குங்கண்ணே..
அவங்க கூட வாழ்றத விடவும் ஹாஸ்பிடல்ல வாழ்றதுதான் அதிகமா இருக்கு போலிருக்கு உங்களுக்கு...
எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாங்க உங்களைக் கவனிச்சுக்க..?
(நெசமாலுமே இப்படியெல்லாம் நடந்திச்சா? இல்லன்னா நர்சையாவது டாக்டரையாவது சைட் அடிக்கப் போனீங்களா? :P )

June 17, 2008 at 7:40 AM  
Blogger M.Rishan Shareef said...

// அதனால வருத்தப்படாத வாலிபரண்ணங்கலே ஜாக்கிரதையா இருங்கண்ணே இந்த டாக்டக்ர்ககிட்ட. //

அங்கிட்டு என்னைத் தவிர மத்த அம்புட்டுப் பேரும் ஏற்கெனவே தொப்பையும்,தொந்தியும்,நரையுமா குண்டாத்தான் இருக்காய்ங்கண்ணே :)

June 17, 2008 at 7:42 AM  
Blogger S.Muruganandam said...

//நர்சையாவது டாக்டரையாவது சைட் அடிக்கப் போனீங்களா?//

அந்தக் காலம் எல்லாம் கடந்தாச்சுண்ணே.

நெசமாலுமே கண்ண நம்பமுடியிலேங்க, ஆரும் பின் பதிவு போடமாட்டாங்கண்ணு பதிவு பக்கமே போகலீங்க.

ஆச்சிரியமா இருந்தது நீங்க வந்து பதிவிட்டது.

ரொம்ப ரொம்ப நன்றீங்கோ ஏன்னா நான் உங்களோட ஃபேன்ன்னுங்கோ.

June 23, 2008 at 9:09 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home