திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Wednesday, May 13, 2009

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு

மே மாத PIT போட்டிக்காக

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு இந்த குண்டனுக்கு இருக்காதா என்ன? அது தான் கொட்டாவி விடுகின்றது.


கலாப மயில் தோகை விரித்து ஆடினாலே அது ஒரு அழகு தானே?
A thing of beauty is joy forever.



முதலில் கொட்டாவி அடுத்தது உறக்கம் தானே..


பாவம் வரிக்குதிரையாருக்கு புல் தான் கிடைத்தது

ஆனாலும் கரடியார் ரொம்ப லக்கி கொய்யாக் காய் கிடைத்திருக்கின்றது. ஒரு வெட்டு வெட்ட தயார் ஆகின்றார்.


இதில் எதை போட்டிக்கு அனுப்பலாம் என்று சொல்லுங்களேன்????

Labels: ,

Saturday, September 13, 2008

மீண்டும் சந்திப்போம் அன்பர்களே


பொன்னிறத்தில் எம்பெருமான்



ஆடுகின்றானடி திருக்கயிலையிலே ( விஷ்ணு மத்தளம் கொட்ட, பிரம்மா தாளம் தட்ட, அம்மை பார்வதி, கணேசன், முருகனுடன் ஐயன் உடுக்கையை ஒலித்துக்கொண்டு திருக்கயிலையில் ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டே சகல புவனத்தையும் ஆட்டி வைக்கும் அற்புதக்காட்சி.)







இன்று வரை தாங்கள் தரிசித்த திருக்கயிலாய மானசரோவர் தரிசனம்




(படங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்)



நம்மூர்ல எல்லாவற்றையும் மங்களகரமா சொல்ல வேண்டுமென்பதற்காக இவ்வாறு கூறுமாறு அமைத்துள்ளனர், எனவே கவலைப்பட வேண்டாம் மீண்டும் வந்து தொல்லை தருவேனோ என்று. ஆயினும் வலைச்சர்ம் மூலமாக இல்லாவிட்டாலும் அடியேனது வலைப்பூக்கள் மூலம் சந்தித்துக் கொள்ளலாம்.



இந்த ரெண்டு வாரமா அடியேன் பெரிய அம்மிணியோடயும், சின்ன அம்மிணியோடயும் கிறுக்குன கிறுக்கலகளை வந்து படிச்ச்வங்க எல்லாருக்கும் பெரிய கும்பிடுங்கோ.

ரொம்ப நல்லா போச்சுதுங்க ரெண்டு வாரம், KRS சார் வந்து நெறைய பட்டம் கொடுத்தாருங்க. துளசி டீச்சர் வந்து ஐடியா கொடுத்தாங்க, யாரைப் பத்தி எழுதனனோ அநேகமா எல்லாரும் வந்து பார்த்துட்டு போனாங்க.



ரொம்பப் பேரு வந்து கயிலை நாதரை தரிசிச்சாங்க, அருமையான தரிசனம் கெடச்சுத்துன்னும் சொன்னாங்க அதுக்காக சந்தோஷங்க. ஒரு வருஷமா 70 பதிவுகள்ல முடியாதது இரண்டு வாரத்துல 20 பதிவுகள்ல கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோஷங்க.




திருக்கயிலாய யாத்திரை CD/DVD/புத்தகம்(தமிழில்) வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmailல் தங்கள் முகவரியுடன் மின்னஞ்சல் செய்தால் அவர்க்ளுக்கு அனுப்பி வைக்கிறேன். திருக்கயிலாயம் செல்ல விரும்பும் அன்பர்கள் எந்தவித உதவி வேண்டுமென்றாலும் அடியேனை அணுகலாம்.




எப்படியோ 25 பதிவுகள் எழுதிட்டேன், சீனா ஐயா கொடுத்த எல்லா வேலைகளையும் முடிச்சாச்சுன்னு ஒரு திருப்தி.




இன்னும் நெறையப்பேரைப் பத்தி எழுத நெனைச்சிருந்தேன், குறிப்பு கூட எடுத்து வெச்சிருந்தேன், இரண்டு வாரமா எழுதியும், கிடச்ச நேரத்துல இவ்வளவுதான் முடிஞ்சது அதனால் தான் பல பதிவுகள்ல உங்களோட அறிமுக சுட்டி மட்டும் குடுத்திருக்கேன். ஏதாவது குறை இருந்தால் மன்னிச்சுக்கோங்கோ.






எவ்வளவோ புதுப் புது வலைப்பூக்களை பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அடியேனுக்கு இந்த வாய்ப்பை அளித்த சீனா சாருக்கும், வலைச்சர குழுவினருக்கும் மீண்டும் நன்றி, இவர்கள் சேவை மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.





உங்கள் அனைவரிடமும் இருந்து நன்றி கூறி விடைபெற்றுக் கொள்பவர்கள் உங்கள் பெரிய அம்மிணி, சின்ன அம்மிணி, கைலாஷி.



நன்றி வணக்கம்.
------------------------------------------

Labels:

வெட்டிப்பய புள்ளைக சங்கம்

இந்தக் காலத்துல எல்லாம்மே தலை கீழா மாறிப்போச்சுங்க, காலம் கெட்டுப்போச்சுன்னு இதைத்தான் சொல்றாங்களோ. எங்க காலத்துல வெட்டிப்பசங்கன்ன ஒரு "தனி மரியாதை" இருந்துங்க அதை இவங்க கெடுத்துட்டாங்க.

வெட்டி பய புள்ளைக சங்கம்!!!

இதுல இவங்க ரெம்ப உருப்படியா நேரம் செலவழிச்சு எழுதறதைப் படிக்கப்போனா,







ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு!!! ன்னு சொல்லறாங்க.

இப்படி உருப்படியான வேலை செய்யறவங்க

சுட்டிப்பய புள்ள

ஆல் இன் ஆல் அழகுராஜா

பேரின்ப பேச்சுக்காரன்

பாசக்கார பயபுள்ள...

Pulipandi

கொருக்குபேட்டை கஜா

இருக்குங்க கடையா ஒரு missile ( ஆப்பூ)

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...

இதைப்படிச்சுட்டு என்னால சிரிக்காம இருக்க முடியல்ல ரொம்ப டமாஸ்தான் போங்க. நேரம் கெடைக்கறப்ப நீங்களும் போங்க.




------------------------------------




இன்றைய தினம் மேக மூட்டத்தின் நடுவில் எம்பெருமான் எப்படி காட்சி தருகின்றார் என்பதைப் தரிசனம் செய்கின்றீர்கள் அன்பர்களே.

எம்பெருமானுக்கு எதிரில் நந்தி எப்படி தன் மூச்சுக்காற்றால் பொன் மயமான ஊஞ்சலில் கமனீயமாக ஆடும் பவள நிற எம்பிரானையும், பச்சை பசுங்கொடி பர்வத ராஜ குமாரியையும் குளிவிக்கிறார் என்பதை காணுகின்றீர்கள்.



( ஐயனுக்கு எதிரே உள்ள சிறிய மலைதான் நந்தியெம்பெருமான்)


கருணா மூர்த்தி எம்பிரானின் ஜடாமுடி, தேவலோகத்திலிருந்து கங்கை பூலோகத்திற்க்கு ஐயனின் ஜடாமுடியின் வழியாகத்தானே இறங்கினாள்.






ஐயனின் ச்த்யோஜாத முகம் மேக மூட்டத்தில்.




மானசரோவர் தடாகம்






இராக்ஷஸ் தால் ஏரி

இளம் மொக்குகள்

சி.அ : இன்னா நைனா, காலங்கார்த்தால குந்திகினூ இன்னா ரோசனைல கீறீப்பா?

அது ஒன்னுமில்ல்ம்மே , ஏதோ ஒன்னு இடிக்குதும்மே அதாங் இன்னான்னு ரோசிச்சிகீனு கீறேன்.

பெ.அ : அட கஸ்மாலம், இதுக்கு என்னா ரோசனை, ஒரு தபா எழுதுனது எல்லாத்தயும் திருப்பிப்ப் பாரு, இன்னா விட்டு போச்சுன்னு அம்புட்டுடிம்.

கரீக்டா சொன்னேம்மே இப்பவே ஒரு தபா பாத்துட்றேன்.

சி.அ: இன்னா சிக்குச்சா.

ஆங் மாட்டிகிச்சு, புச்சா பதிவு எழுதவறங்லை சொல்லிக்க்லையே.

பெ அ. அதுக்கிண்ணா, இப்போ சொல்லிப்போடு

இத இபபால எழுதறேன், ரொம்ப டேங்ஸ்ம்மே.

பெ அ: சீக்கரம் எழுதுபா இல்லாட்ட டைம் முடிஞ்சு போகும் நாளைல இருந்து வேற மனுஷன் எழுதனுமில்ல.

அகாங் இப்பவே எழுதி கடாசிர்ரேங்.

(பிறந்தது,வளர்ந்தது பள்ளியில் படித்தது எல்லாம் உடுமலைப்பேட்டையில், மேற்படிப்புக்காக கிண்டி வந்த பின். இந்தியா முழுக்க சுற்றினாலும் வாசம் சென்னையிலே அதிகம், ஆயினும் சென்னை செந்தமிழ்( மெட்ராஸ் பாஷை) சரியாக வரவில்லை. ஆகவே இப்பதிவில் சிறு முயற்சி செய்துள்ளேன், ஆயினும் சரியாக் வராததால் பாதியில் விட்டு விடுகிறேன்.)

----------------------------------------------------------
வலைச்சரத்தில் புது அன்பர்களையும் அறிமுகம் செய்ய்யும் ஒரு வழக்கம் உள்ளது . ஆகவே இப்பதிவு அப்படிப்பட்ட புது பதிவர்களுக்காக.

ஆனால் முதல் அன்பர் அடியேன், கீதாம்மா போல திருக்கயிலாய தரிசனம் பெற்றவர். திருக்கயிலாய யாத்திரை பற்றி ஒரு நூலும் எழுதியுள்ளார், இது வரை எழுதிய பதிவுகளில் இவர் இடம் பெறவில்லை என்பதால் இவர் இப்பதிவில் இடம் பெறுகிறார்.

திருக்கயிலை நாத்னை தரிசன்ம் செய்யும் பேறு பெற்ற இன்னொரு அன்பர் சிங்கை கிருஷ்ணன்

இவரது வலைப்பூ சிங்கை கிருஷ்ணன் ப்திவுகள்

இவர் தன்னை பற்றி கூறும் அறிமுகம்:

தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகத் தேடலில் இன்புறுகிறேன். அம்மையப்பன் அருளால் மூன்று நூல்கள் எழுதியிருக்கிறேன். அருளாட்சி அழைக்கிறது, கண்டேன் கயிலையை, மற்றும் சிங்கப்பூர் கோவில்கள் என்பன அம்மூன்று நூல்கள்.

எனது பிற தளங்கள்:

சைவம்

சிங்கைக் கோவில்கள்

தற்போது பொருணை நதிக்கரை கோவிலகள் பற்றியும் பதிவிடுகிறார். வளர்க சிங்கை கிருஷ்ணன் ஐயாவின் தொண்டு.
--------------------------------

இனி சில புதுப்பதிவர்கள் பற்றிய அறிமுகம்

ரங்க மீனா மலேசியாவில் வசிப்பவர். மிகவும் அருமையாக ஆத்திச்சூடிக்கதைகளை பதிவிடுகிறார்.


ஆத்திசூடி நீதிக்கதைகள். இவர் ஏன் ஔவையின் கதைகளை பற்றி எழுதுகின்றார் அவரே இவ்வாறு கூறுகின்றார்.

"இங்கு சொல்லப் போகும் 108 ஆத்திசூடிக்கான நீதிக்கதைகள் யாவும் அந்தக்கால கதைகள்!.இக்கதைகள் பெரும்பாலும் நாம் அறிந்ததுதான் என்றாலும் அறியாதவரும் இருப்பார்கள். இதில் வரும் பல கதைகள் இந்தக்கால கட்டத்திற்கு பொருந்தாமலும் இருக்கக்கூடும் அப்படி இருக்குமெனில் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்."

இவரது இன்னொரு வலை மொக்கு தாலாட்டு கூட்டுக்குடும்பங்கள் மறைந்து,கணவன் , மனைவி இருவரும் வேலைக்கு ஒடுவதால் மறைந்து வரும் தாலாட்டுப்பாடல்கள், அடுத்த தலைமுறைக்கு மறந்து போகாமல் இருக்க மல்ரும் நினைவுகளாய் தாலாட்டுப்படல்களை பதிவிடுகிறார்.

நன்றி மற்றும் வாழ்த்துக்க்கள் ரங்க மீனாம்மா.

-----------------------------

இவர் தற்பொது இங்கிலாந்தில் வசிக்கும் புது வண்டு. லண்டனில் வசிப்பதால் வலைப்பூவிற்கு Newbee என்று பெயரிட்டுள்ளார், ஆனால் URL - naanpudhuvandu என்று கொடுத்திருக்கிறார். பிறந்த வீட்டையும், புகுந்த வீட்டையும் விட்டுத்தராதது அருமையோ அருமை.

NewBee ஒரு வண்டின் ரீங்காரம், குழந்தைகளுக்கன படக்கதை, கதை என்று அருமையாக மிளிர்கிறது. தன் மகனுக்காக எழுதியதை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் என்று பதிவிடும் அன்பு உள்ளம் கொண்டவர்.

இவர் தன்னைப்பற்றி இப்படி சொல்லுகின்றார்.

வருகைக்கு நன்றி! உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது வண்டின் நட்பு; கொடுத்தது 'என் புன்னகை' யார் இந்த வண்டு? ஏன் இந்தப்பதிவு? வண்டு! உங்களைப் போல் ஒன்று. ஆம்! உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு?' என்று. :) :)


குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்' படிக்க கிளிக்குங்கள் இங்கே.

இவர் வலைச்சரத்தில் கற்ற புதுமொழியை ( விக்கி பாஷை) என்று அழைக்கலாமா? இப்படி பட்டியலிடுகிறார். புதிதாக வலையில் நுழையும் அன்பர்களுக்கு ஒரு அருமையான Dictionery இது.

1. வலைப்பூ = Blog / வலைத்தளம் = Website ;


2. பதிவு, இடுகை = Post ;


3. சுட்டி = Pointer, Link ;


4. வழிமொழிகிறேன், சொல்லேய், மறுக்கா சொல்லேய் = Repeat(u) - (நன்றி - TBCD :)) ;



5. மறுமொழி , பின்னூட்டம் = Comment ;


6. மறுமொழி மட்டுறுத்தல் = Comment moderation ;


7. சிரிப்பான் = smiley (நன்றி - ரசிகன்:-));


8. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...! அல்லது ஐயோ! = Oops! (நன்றி- An&);


9. முன்னோட்டம் = Trailer(நன்றி விஜய்);


10. முதலிலேயே நன்றி அல்லது முன் நன்றிகள் = Thanks in advance ;


11.அதிர்ஷ்டமடிக்கட்டும் = Best of Luck ;


12. சிறப்பாக அமையட்டும் = All the Best ;


13. அடிக்குறிப்புகள் = Footer Message(10,11,12,13 - நன்றி Shanevel)

மற்றவை அனைத்திற்கும் நன்றி - சீனா ஸார் :). (இன்னும் பழகுவேன்....) என்று கூறும் புது வண்டிற்க்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

( இரங்கமணி, தங்கமணி, கும்மி, மொக்கை, கவுஜை இதற்கெல்லாம் எனக்கும் விளக்கம் தெரியவில்லை யாராவது உதவுவீர்களா? அன்பர்களே) ------
-------------------------------------

அடுத்தப் புதுப்பதிவர் கடையம் ஆனந்த் அவர்கள்.

என்னுடன் நீங்களும், உங்களுடன் நானும்... பிடித்திருந்தால் பழகுவோம் (இது கடையத்து தென்றலின் அன்பு அழைப்பு) என்று ஆரம்பிக்கும் ஒரு பிள்ளையார் பக்தர். மார்ச் 2008ல் வலைப்பூவை துவங்கியவர் இது வரை 55 பதிவுகள் இட்டுள்ளார்.

மனம் இவரது வலைப்பூ.பல்வேறு தலைப்புக்ளிலும் எழுதி மலரத்தொடங்கியுள்ளார். தனக்கு பிடித்தது ஆன்மிகம் என்று சொல்லும் ஒரு இனிய அன்பர் இவர் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.

Labels:

Friday, September 12, 2008

குட்டீஸ் கார்னர்

ஹாய் அங்கிள், ரண்டு வாரமா, எல்லா பெரியவங்க வலைப்பூவைப்பத்தியும் எழுதீட்து வரிங்க்க், ஆன்னா எங்களைப்பத்தி எதுவும் சொல்லலையேன்னு ஒரு குரல் கேட்டுச்சு யாருடான்னு பார்த்தா ஒரு குட்டி பாப்பா.


( இது கற்பனை இல்லீங்க உண்மைங்க, இந்த பாப்பாதாங்க வலைச்சரத்தின் முதல் Follower)


ஏ! குட்டிப் பாப்பா நீயும் வலைப்பூ எழுதறயான்னு கேக்க, ஆமா அங்கிள் அதனால்ல எங்களைப்பத்தியும் எழுதுங்கன்னு சொன்னா உன்னோட பேரு என்னம்மான்னு கேட்க நிலான்னு சொல்ல;



என்னம்மா செய்யறேன்னு நான் கேட்க , குட்டி பாப்பாக்கு என்ன வேலை இருக்கும்? மம்மு குடிக்க, ஆப்பு சாப்பிட, மூச்சா போக, கோபம் வந்தா அழுக, ரொம்ப கோபம்னா கிடைச்ச இடத்துல நருக்னு கடிச்சு வைக்க, இப்போதைக்கு இதான் செய்யறேன்னு ன்னு சூப்பரா சொல்லுது . அப்பறம் அந்தப் பாப்பாவைப்பத்தி எப்படீங்க எழுதாம இருக்க முடியும்.

அந்த பாப்பாவோட விருப்பத்துக்காக இந்தப்பதிவு. அந்த பாப்பாவோட போட்டோக்களைப் பாக்க கிளிக்குங்க நிலா பாப்பா

சரின்னு சொல்லி அந்த பாப்பா சொன்ன வலைப்பூவில போய் பாத்தாதாங்க தெரியுது அந்த பாப்பா மட்டும் இல்லீங்க இனியும் நெறைய பாப்பாக்கள் சேந்து .குட்டீஸ் கார்னர் . :: ல லூட்டி அடிக்கறாங்கண்ணு அந்த மத்த் பாப்பாக்க




SanJai





இளமதி





அம்மு





பானுதேஜு





Shridhu





.:: மை ஃபிரண்ட் ::





ஆஷ் அம்ருதா





Baby Pavan





இவங்க தாங்க சின்ன வயசுலேயே கலக்கறவங்க. ( இதுல யாராவது பெரியவங்க இருந்தா அது என்னோட தப்பு இல்லீங்க)




நிலாக்குட்டி போட்டோக்களை பார்க்க இங்கே போங்க. அதுல இருக்கற அந்த பாப்பா அனிமேஷன் சூப்பரு.



baby pavan போட்டோஸ் பார்க்க இங்கே போங்க .பேபி பவன்



இவ்வாறு வித்தியாசமாகவும் யோசித்து வலைப்பூக்களை உருவாக்கி பதிவு செய்து கொண்டு வரும் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

----------------------------------------------------
இன்றைய தினம் யாத்திரை செல்லும் வழியில் அடியோங்கள் இரசித்த பனி மூடிய மலைச்சிகரங்கள் சிலவற்றை கண்டு களியுங்கள் அன்பர்களே.




Sangrur Peaks on the Nepal side view from Gunji

சாங்ரூர் சிகரம் -கூஞ்சியிலிருந்து.




Nilkant Peak on the Nepal side


நேபாளப்பகுதியில் அமைந்துள்ள நீலகண்ட சிகரம்







Nag Parvat along with Nagini- Kalapani (resembles snake raising its hood)


படம் எடுத்திருக்கும் நாகம் போன்று தோன்றும் நாக பர்வதம், அருகில் உள்ள சிறிய சிகரம் நாகினி சிகரம்





Nabhi Peak -Nabhidang(resembles naval of human body)


மனித உடலின் நாபியை போன்று அமைந்துள்ள நாபி பர்வதம்.


These three peaks also form the juncton of three international borders of India, Nepal and China.


திரிசூல பர்வதம், ஓம் பர்வதம், மற்றும் நாபி பர்வதம் ஆகிய மூன்றும் இந்திய,நேபாள, சீன எல்லையில் அமைந்துள்ள முக்கூடல்.



Naturally formed cosmic symbol OM- a wonder of Nature -OM PARVAT -Nabhidang


இயற்கையின் ஒரு அதிசயம் -ஓம் பர்வதம் -நாபிதாங்




Trishul Peak( Resembles Trident , supposed to be Shiva, Parvati and Ganesh)-Nabhidang


திரிசூல பர்வதம்- சிவன், பார்வதி, கணேசரை குறிப்பதாக ஐதீகம் - நாபிதாங்






Gurla Mandata peaks in China


இராமரின் பாட்டனாரான குர்லா மாந்தாத்தா தவம் செய்த குர்லா சிகரம். சைனாவில் அமைந்துள்ளது.




Chiyalekh Pass -gateway to valley of flowers.


பூ சமவெளியின் நுழைவாயிலான சியாலே மலைச்சிகரம்




Indian mountain view from Lipulekh pass


லிபுக்கணவாயிலிருந்து இந்திய மலைப்பகுதி






Annapurna Peaks


நேபாளப்பகுதியில் அமைந்துள்ள அன்னபூரணி சிகரம்.





Adi Kailash or Chotta Kailash - on way to Gunji ( exactly resembles Holy Kailash)


ஆதி கைலாயம் -சிறிய கைலாயம்.


இந்திய பகுதியில் அமைந்துள்ள சிகரம் திருக்கயிலாயம் போன்றே தோன்றுவதால் இந்தப் பெயர்.



Labels:

PIT போட்டியும் தேன் கிண்ணமும்


தமிழ் வலையுலக் அன்பர்களை கையில் புகைப்படக்கருவியுடன் அலைய வைக்கும் ஒரு பிரபலமான வலைப்பூ இது. பெய்ர் என்னவோ தமிழில் இல்லை என்றாலும் கருத்து தமிழ் வலைப்பதிவர்களை நல்ல புகைப்பட கலைஞர்கள் ஆக்குவதுதான். PIT போட்டிக்கு புகைப்படம் அனுப்பாத தமிழ் வலை அன்பர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.

ஒரு சமயம் அடியேன் கூட் ஒரு பதிவிட நினைத்தேன் " தமிழர்களை மென்ட்டலாக்கும் ஃபிட் போட்டி " என்று. நல்ல வேளை எழுதவில்லை எழுதியிருந்தால் இப்படி இருந்திருக்கும். சென்ற வாரம் நான் டேராடுன் போயிருந்தேன் அப்போது அங்கிருந்த ஒரு பார்க்குக்கு ஜாலியாக போயிருந்த போது ஒரு ஆளு நம்ம ஆளு மாதிரி தெரிஞ்சாரு கேமாரவை மாட்டிகிட்டு ஒவ்வொரு பூவா வித விதமா போட்டோ எடுத்துகிட்டு இருந்தாரு, மெல்ல என்னங்க தமிழான்னு கேட்டா, ஆமாங்க எப்படி கண்டு பிடிச்சீங்கன்னு கேட்டாரு, நான் அதுக்கு அது தான் மூஞ்சியிலே எழுதி ஒட்டியிருக்கேன்னு சொல்லிட்டு என்ன பண்ணீடடு இருக்கீங்கன்னு கேட்க PIT போட்டிக்கு போட்டோ எடுத்து கிட்டிருக்கிறேன்னு சொன்னருங்க.




ஒரு வாரம் கழிச்சி மெட்ராஸ் வந்து ஒரு நாள் ரோட்டுல நடந்து போயிட்டிருந்த பொது ஒருத்தரு வட்டமா எதைப் பார்த்தாலும் அதை முறைச்சு முறைச்சுப் பார்த்துகிட்டிருந்தார், ரோட்ட்டுல ஓடற பஸ் கார்ரோட சக்கரம், ரோட்டுல நடுவுல இருக்கற சாக்கடை மூடி அப்படி எதாவது வட்டமா இருந்தாலும் போட்டோ எடுத்துக்கிட்டிருந்தாருங்க . அவங்களை கேட்டா PIT போட்டிக்கு போட்டோ எடுத்து கிட்டிருக்கேன்னு சொல்லறாங்க,
இப்பிடி தமிழ் மக்களை மென்டலாக்கி , புகைப்பட கலைஞனாக்க முயற்சிக்கும் photography-in-tamil வலைப்பூவை உருவாக்கி நடத்திக் கொண்டு வரும்










ஆகியோருக்கு நன்றீங்க



இதுல jeeves சார் தேன் கிண்ணங்கற வலைப்பூவுலயும் பங்களிக்கறாரு.
சினிமாப்பாடலுக்கான வலைப்பூ. நீங்கள் சினிமாப்பாடல்களை படிக்கலாம், பார்க்கலாம் , கேட்கலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு பாடகர் வார நட்சத்திரமாக நியமித்து அவரோட பாடல்க்ளை பதிவு செய்யறாங்க. இதன் பங்களிப்பார்கள்












( இவர் முருகனுருள் வலைப்பூவிலேயும் பங்கேத்துகறாங்க)












































நிச்சயமாக அன்பர்கள் அனைவரும் ஒரு தடவையாவது இவ்வலைப்பூ பக்கம் போயிருப்பீங்க. இல்லாட்டி உடனே போய் பாருங்க ஏமாற்றம் அடைய மாட்டேங்க ஏன்னா சினிமாப்பாட்டுக்களை முணுமுணுக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க.
------------------------------------

இன்றைய தினம் திருக்கயிலாயமும் மானசரோவரும் இணைந்த

கௌரி-சங்கர் தரிசனம் காணுங்கள் அன்பர்களே.



இராக்ஷஸ் தால் ஏரியிலிருந்து திருக்கயிலாய தரிசனம்





The first darshan of Kailash during the yatra is from Rakshas Tal only enjoy that view .


திருக்கயிலாய யாத்திரையின் போது கயிலயங்கிரியின் முதல் தரிசனம் இராவணன் உருவாக்கிய இந்த இராக்ஷஸ்தாலிலிருந்து தான் கிடைக்கிறது அந்த அழகை இரசியுங்கள்.



Enjoy the beauty of the Lord and Mother with Manasarovar -


This view is known as Gowri Shankar



நம் கோனும் பிராட்டியும் இந்த புவனம் முழுவதற்கும் அரசன் அரசியாக வீற்றிருந்து அருள் பாலிக்கும் அழகுதான் என்னே!























We will continue with the view of Kailash from Manasarovar and Rakshastal.

இனி கௌரி சங்கர் என்று அழைக்கப்படும் கைலாயம் மற்றும் மானசரோவர் இரண்டும் இனைந்த தரிசனம்









Labels:

சில உபயோகமான வலைப்பூக்கள்


இப்பதிவில் எல்லோருக்கும் பயனளிக்கும் சில வலைப்பூக்களைப்பற்றி காண்போம்.




முதலாவது சூடான செய்திகளுக்கு நீங்கள் ஓட வேண்டிய வலைப்பூ சற்றுமுன்...

இவ்வளவு மெனக்கெட்டு மத்தவங்களுக்காக தங்கள் நேரத்தை செலவு செய்து செய்திகளைப் படித்து தருபவர்கள்
மணியன்




















































பெருசு
----------------------------------
இந்த விக்கி(wiki) யுகத்தில் உங்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்காக " தெரிஞ்சிக்கோ! அறிஞ்சிக்கோ! தெளிஞ்சிக்கோ!" என்பதை குறிக்கோளாக வைத்து செயல்படும் வலைப்பபதிவர்கள் யாருன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருந்தா கீழே படிங்க.

வலைப் பூ : விக்கி பசங்க

உங்களுக்கு வேணுங்கற தகவல்களை தர்றவங்க





































இப்பக்கத்தின் வலதுபுறத்தில் உள்ள கேள்விக்குறியினைச் சுட்டி, அதிலுள்ள பதிவில் விக்கிப்பசங்களுக்கான உங்கள் கேள்விகளைக் கேட்கலாம், கேட்டு சந்தேகத்தை தீர்த்துகிட்டு எல்லோருக்கும் சொல்லுங்க.
-------------------------------------------
இப்பொழுது எல்லாருமே ஆங்கிலம் கலக்காமல் பேசவோ எழுதவோ முடிவதில்லை எனவே இவங்கல்லாம் சேர்ந்து


பரங்கிப்பேட்டை ஹ. பஃக்ருத்தீன்.
















வாஞ்சிநாதன்

தர்ற இயன்ற வரையிலும் இனிய தமிழில்... வலைப்பூக்குப் போனா இனிய தமிழ கற்கலாம்.



------------------------







காசேதான் கடவுளடா என்று எண்ணும் அன்பர்களுக்கு பங்கு மார்கட்டில் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்று கூறும் வலைப்பூ.






இதன் ஆசிரியர் சரவணக்குமார்.






மூன்று இலட்சம் பார்வைகளைத் தொடப்போகின்றது இவ்வலைப்பூ.






தெளிவான திட்டமிடுதல், நேர்த்தியான அணுகுமுறை, தொடர்ச்சியான ஆர்வம், தளராத மன நம்பிக்கை இதனோடு கொஞ்சம் பணமிருந்தால் போதும் சாதித்து விடலாம் என்று அழைக்கின்றார் இவர்.






பங்கு மார்க்ட்டில் பணம் செய்ய விரும்புவர்களுக்கு ஏற்ற வலைப்பூ.






600 வது பதிவை எழுதிவிட்டு பங்கு வணிகம் ஆசிரியர் இவ்வாறு கூறுகின்றார்.



இந்த பதிவின் வெற்றி நிச்சயமாய் என்னுடையது அல்ல….இத்தனை நாள் தொடர்ந்து எழுதியதும் என்னுடைய சாதனை இல்லை…இவை அனைத்துமே உங்களால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. நீங்கள் அளித்த ஊக்கமும், உற்சாகமுமே இந்த அறுநூறாவது பதிவு….இது வெற்றி அல்லது சாதனையாக கருதப்படும் பட்சத்தில்….அதனை…அதன் காரண கர்த்தாவாகிய உங்களுக்கே சமர்ப்பிக்க்றேன்.





-------------------------------------------------


இன்றைய தினம் ஜூன் மாதத்தில் ( பனி முழுவதுமாக உருகாத காலத்தில்) திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்ட ஒரு அன்பர் தனது தரிசன காட்சிகளை கொடுத்து அருளினார் அதிலிருந்து சில உங்கள் பார்வைக்கு.


சிவசக்தியின் திருவடி நீழலில் உறங்கும் அனபர்கள்




இராக்ஷஸ் தால் ஏரியிலிருந்து ஐயனின் தரிசனம்




மானசரோவரத்தில் அற்புத ஆனந்த தீர்த்தமாடல்


பின் புறம் குர்லா மாந்தாதா மலைத்தொடர்




ஆலமுண்ட நீலகண்டரின் தெற்கு முகம் ( முக்கண்கள், கங்கை இறங்கிய ஜடாமுடி, இராவணன் வடக்க்யிற்றின் வடு அகியவற்றை இம்முகத்தில் காணலாம்)





இந்துக்களாகிய நாம் நடந்து கயிலாய கிரிவலம் வருவோம் இது பரிக்ரமா என்று அழைக்க்ப்படும் 52 கி. மீ கிரி வலத்தை நாம் மூன்று நாட்களில் முடிக்கிறோம்.


ஆனால் திபெத்தியர்கள் அடி விழுந்து கும்பிட்டு கிரி வலம் வருகின்றனர். இவ்வாறு பனியிலும் கோரா செய்யும் இரு திபெத்தியப் பெண்களை படத்தில் காணலாம் , இவர்கள் ஒரு தடவை கோராவை முடிக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகின்றன. என்னே இவர்கள் பக்தி.




ஆனந்த வாமதேவ மூர்த்தி

Labels: