திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Saturday, September 13, 2008

மீண்டும் சந்திப்போம் அன்பர்களே


பொன்னிறத்தில் எம்பெருமான்



ஆடுகின்றானடி திருக்கயிலையிலே ( விஷ்ணு மத்தளம் கொட்ட, பிரம்மா தாளம் தட்ட, அம்மை பார்வதி, கணேசன், முருகனுடன் ஐயன் உடுக்கையை ஒலித்துக்கொண்டு திருக்கயிலையில் ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டே சகல புவனத்தையும் ஆட்டி வைக்கும் அற்புதக்காட்சி.)







இன்று வரை தாங்கள் தரிசித்த திருக்கயிலாய மானசரோவர் தரிசனம்




(படங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்)



நம்மூர்ல எல்லாவற்றையும் மங்களகரமா சொல்ல வேண்டுமென்பதற்காக இவ்வாறு கூறுமாறு அமைத்துள்ளனர், எனவே கவலைப்பட வேண்டாம் மீண்டும் வந்து தொல்லை தருவேனோ என்று. ஆயினும் வலைச்சர்ம் மூலமாக இல்லாவிட்டாலும் அடியேனது வலைப்பூக்கள் மூலம் சந்தித்துக் கொள்ளலாம்.



இந்த ரெண்டு வாரமா அடியேன் பெரிய அம்மிணியோடயும், சின்ன அம்மிணியோடயும் கிறுக்குன கிறுக்கலகளை வந்து படிச்ச்வங்க எல்லாருக்கும் பெரிய கும்பிடுங்கோ.

ரொம்ப நல்லா போச்சுதுங்க ரெண்டு வாரம், KRS சார் வந்து நெறைய பட்டம் கொடுத்தாருங்க. துளசி டீச்சர் வந்து ஐடியா கொடுத்தாங்க, யாரைப் பத்தி எழுதனனோ அநேகமா எல்லாரும் வந்து பார்த்துட்டு போனாங்க.



ரொம்பப் பேரு வந்து கயிலை நாதரை தரிசிச்சாங்க, அருமையான தரிசனம் கெடச்சுத்துன்னும் சொன்னாங்க அதுக்காக சந்தோஷங்க. ஒரு வருஷமா 70 பதிவுகள்ல முடியாதது இரண்டு வாரத்துல 20 பதிவுகள்ல கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோஷங்க.




திருக்கயிலாய யாத்திரை CD/DVD/புத்தகம்(தமிழில்) வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmailல் தங்கள் முகவரியுடன் மின்னஞ்சல் செய்தால் அவர்க்ளுக்கு அனுப்பி வைக்கிறேன். திருக்கயிலாயம் செல்ல விரும்பும் அன்பர்கள் எந்தவித உதவி வேண்டுமென்றாலும் அடியேனை அணுகலாம்.




எப்படியோ 25 பதிவுகள் எழுதிட்டேன், சீனா ஐயா கொடுத்த எல்லா வேலைகளையும் முடிச்சாச்சுன்னு ஒரு திருப்தி.




இன்னும் நெறையப்பேரைப் பத்தி எழுத நெனைச்சிருந்தேன், குறிப்பு கூட எடுத்து வெச்சிருந்தேன், இரண்டு வாரமா எழுதியும், கிடச்ச நேரத்துல இவ்வளவுதான் முடிஞ்சது அதனால் தான் பல பதிவுகள்ல உங்களோட அறிமுக சுட்டி மட்டும் குடுத்திருக்கேன். ஏதாவது குறை இருந்தால் மன்னிச்சுக்கோங்கோ.






எவ்வளவோ புதுப் புது வலைப்பூக்களை பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அடியேனுக்கு இந்த வாய்ப்பை அளித்த சீனா சாருக்கும், வலைச்சர குழுவினருக்கும் மீண்டும் நன்றி, இவர்கள் சேவை மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.





உங்கள் அனைவரிடமும் இருந்து நன்றி கூறி விடைபெற்றுக் கொள்பவர்கள் உங்கள் பெரிய அம்மிணி, சின்ன அம்மிணி, கைலாஷி.



நன்றி வணக்கம்.
------------------------------------------

Labels:

2 Comments:

Blogger இந்திரா said...

பகிர்வுக்கு நன்றி.

இந்திரா.
(தீவு.கோம்) .

July 23, 2010 at 12:12 PM  
Blogger S.Muruganandam said...

வருகைக்கு நன்றி இந்திரா

August 8, 2010 at 6:23 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home