உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு
Labels: Animals Photos, PIT
எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.
Labels: Animals Photos, PIT
Labels: வலைச்சரபப்திவு-25
இன்றைய தினம் மேக மூட்டத்தின் நடுவில் எம்பெருமான் எப்படி காட்சி தருகின்றார் என்பதைப் தரிசனம் செய்கின்றீர்கள் அன்பர்களே.
எம்பெருமானுக்கு எதிரில் நந்தி எப்படி தன் மூச்சுக்காற்றால் பொன் மயமான ஊஞ்சலில் கமனீயமாக ஆடும் பவள நிற எம்பிரானையும், பச்சை பசுங்கொடி பர்வத ராஜ குமாரியையும் குளிவிக்கிறார் என்பதை காணுகின்றீர்கள்.
( ஐயனுக்கு எதிரே உள்ள சிறிய மலைதான் நந்தியெம்பெருமான்)
கருணா மூர்த்தி எம்பிரானின் ஜடாமுடி, தேவலோகத்திலிருந்து கங்கை பூலோகத்திற்க்கு ஐயனின் ஜடாமுடியின் வழியாகத்தானே இறங்கினாள்.
இராக்ஷஸ் தால் ஏரி
சி.அ : இன்னா நைனா, காலங்கார்த்தால குந்திகினூ இன்னா ரோசனைல கீறீப்பா?
Labels: வலைச்சரப்பதிவு-23
ஏ! குட்டிப் பாப்பா நீயும் வலைப்பூ எழுதறயான்னு கேக்க, ஆமா அங்கிள் அதனால்ல எங்களைப்பத்தியும் எழுதுங்கன்னு சொன்னா உன்னோட பேரு என்னம்மான்னு கேட்க நிலான்னு சொல்ல;
என்னம்மா செய்யறேன்னு நான் கேட்க , குட்டி பாப்பாக்கு என்ன வேலை இருக்கும்? மம்மு குடிக்க, ஆப்பு சாப்பிட, மூச்சா போக, கோபம் வந்தா அழுக, ரொம்ப கோபம்னா கிடைச்ச இடத்துல நருக்னு கடிச்சு வைக்க, இப்போதைக்கு இதான் செய்யறேன்னு ன்னு சூப்பரா சொல்லுது . அப்பறம் அந்தப் பாப்பாவைப்பத்தி எப்படீங்க எழுதாம இருக்க முடியும்.
அந்த பாப்பாவோட விருப்பத்துக்காக இந்தப்பதிவு. அந்த பாப்பாவோட போட்டோக்களைப் பாக்க கிளிக்குங்க நிலா பாப்பா
சரின்னு சொல்லி அந்த பாப்பா சொன்ன வலைப்பூவில போய் பாத்தாதாங்க தெரியுது அந்த பாப்பா மட்டும் இல்லீங்க இனியும் நெறைய பாப்பாக்கள் சேந்து .குட்டீஸ் கார்னர் . :: ல லூட்டி அடிக்கறாங்கண்ணு அந்த மத்த் பாப்பாக்க
இவங்க தாங்க சின்ன வயசுலேயே கலக்கறவங்க. ( இதுல யாராவது பெரியவங்க இருந்தா அது என்னோட தப்பு இல்லீங்க)
நிலாக்குட்டி போட்டோக்களை பார்க்க இங்கே போங்க. அதுல இருக்கற அந்த பாப்பா அனிமேஷன் சூப்பரு.
baby pavan போட்டோஸ் பார்க்க இங்கே போங்க .பேபி பவன்
இவ்வாறு வித்தியாசமாகவும் யோசித்து வலைப்பூக்களை உருவாக்கி பதிவு செய்து கொண்டு வரும் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
----------------------------------------------------
இன்றைய தினம் யாத்திரை செல்லும் வழியில் அடியோங்கள் இரசித்த பனி மூடிய மலைச்சிகரங்கள் சிலவற்றை கண்டு களியுங்கள் அன்பர்களே.
Nilkant Peak on the Nepal side
நேபாளப்பகுதியில் அமைந்துள்ள நீலகண்ட சிகரம்
Nag Parvat along with Nagini- Kalapani (resembles snake raising its hood)
படம் எடுத்திருக்கும் நாகம் போன்று தோன்றும் நாக பர்வதம், அருகில் உள்ள சிறிய சிகரம் நாகினி சிகரம்
Nabhi Peak -Nabhidang(resembles naval of human body)
மனித உடலின் நாபியை போன்று அமைந்துள்ள நாபி பர்வதம்.
These three peaks also form the juncton of three international borders of India, Nepal and China.
திரிசூல பர்வதம், ஓம் பர்வதம், மற்றும் நாபி பர்வதம் ஆகிய மூன்றும் இந்திய,நேபாள, சீன எல்லையில் அமைந்துள்ள முக்கூடல்.
Naturally formed cosmic symbol OM- a wonder of Nature -OM PARVAT -Nabhidang
இயற்கையின் ஒரு அதிசயம் -ஓம் பர்வதம் -நாபிதாங்
Trishul Peak( Resembles Trident , supposed to be Shiva, Parvati and Ganesh)-Nabhidang
திரிசூல பர்வதம்- சிவன், பார்வதி, கணேசரை குறிப்பதாக ஐதீகம் - நாபிதாங்
இராமரின் பாட்டனாரான குர்லா மாந்தாத்தா தவம் செய்த குர்லா சிகரம். சைனாவில் அமைந்துள்ளது.
Chiyalekh Pass -gateway to valley of flowers.
பூ சமவெளியின் நுழைவாயிலான சியாலே மலைச்சிகரம்
Indian mountain view from Lipulekh pass
லிபுக்கணவாயிலிருந்து இந்திய மலைப்பகுதி
Annapurna Peaks
நேபாளப்பகுதியில் அமைந்துள்ள அன்னபூரணி சிகரம்.
Adi Kailash or Chotta Kailash - on way to Gunji ( exactly resembles Holy Kailash)
ஆதி கைலாயம் -சிறிய கைலாயம்.
இந்திய பகுதியில் அமைந்துள்ள சிகரம் திருக்கயிலாயம் போன்றே தோன்றுவதால் இந்தப் பெயர்.
Labels: வலைச்சரப்பதிவு -22
இன்றைய தினம் திருக்கயிலாயமும் மானசரோவரும் இணைந்த
கௌரி-சங்கர் தரிசனம் காணுங்கள் அன்பர்களே.
இராக்ஷஸ் தால் ஏரியிலிருந்து திருக்கயிலாய தரிசனம்
Enjoy the beauty of the Lord and Mother with Manasarovar -
This view is known as Gowri Shankar
Labels: வலைச்சரப்பதிவு-21
-------------------------------------------------
இன்றைய தினம் ஜூன் மாதத்தில் ( பனி முழுவதுமாக உருகாத காலத்தில்) திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்ட ஒரு அன்பர் தனது தரிசன காட்சிகளை கொடுத்து அருளினார் அதிலிருந்து சில உங்கள் பார்வைக்கு.
சிவசக்தியின் திருவடி நீழலில் உறங்கும் அனபர்கள்
இராக்ஷஸ் தால் ஏரியிலிருந்து ஐயனின் தரிசனம்
மானசரோவரத்தில் அற்புத ஆனந்த தீர்த்தமாடல்
பின் புறம் குர்லா மாந்தாதா மலைத்தொடர்
ஆலமுண்ட நீலகண்டரின் தெற்கு முகம் ( முக்கண்கள், கங்கை இறங்கிய ஜடாமுடி, இராவணன் வடக்க்யிற்றின் வடு அகியவற்றை இம்முகத்தில் காணலாம்)
இந்துக்களாகிய நாம் நடந்து கயிலாய கிரிவலம் வருவோம் இது பரிக்ரமா என்று அழைக்க்ப்படும் 52 கி. மீ கிரி வலத்தை நாம் மூன்று நாட்களில் முடிக்கிறோம்.
ஆனால் திபெத்தியர்கள் அடி விழுந்து கும்பிட்டு கிரி வலம் வருகின்றனர். இவ்வாறு பனியிலும் கோரா செய்யும் இரு திபெத்தியப் பெண்களை படத்தில் காணலாம் , இவர்கள் ஒரு தடவை கோராவை முடிக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகின்றன. என்னே இவர்கள் பக்தி.
Labels: வலைச்சரப்பதிவு-20