திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Sunday, September 7, 2008

அனைவரும் பார்த்து வியக்கும் சில ஆன்மீகப்பூக்கள-2

அடுத்து நாம சொல்லப்போறாவரு "என் வாசகம்" பாடறவரு. திருவாசகம் போல இவர் வாசகங்களும் தேன்.

பெ.அ : அட ஜீவா வெங்கட்ராமன் ஐயாவைப்பத்தி சொல்ல வரீங்களா?

ஆமா இவரும் ரெண்டு விஷயத்தைப் பற்றித்தான் எழுதறாறு, அது ரெண்டுமே இவரோட ரெண்டு கண்ணுக.

சி.அ : அது ரெண்டும் என்னனு நான் சொல்லட்டுமா?

சொல்லு பார்க்கலாம்

சி அ : ஆன்மீகமும்,இசையும்தான் இவரோட இரு கண்கள் . இவர் தி ர ச சாருடன் சேர்ந்து இசை இன்பம் என்னும் வலைப்பூவில் அருமையான இசைப்பாடல்களை தொகுத்து அளித்துள்ளார்.

இசையால் வசமாக இதயம் எதுன்னு இசையை ஆராதிப்பவ்ர் ஜீவா சார்.

இவர் இப்பதிவுல கொடுத்துள்ள வாசகம் " என் அரசே யான் புகழும் இசையும் அணிந்தருளே".ன்னு இவர் பாமாலை பாடி ஆராதிக்கறார் இறைவனை.

பெ. அ : இவரோட ஆன்மீக அரிச்சுவடி அருமையான பதிவு.
மாதர் பிறை கண்ணீயானை ன்னு இவர் எழுதின பதிவும் அருமை.

இவர் நிச்சயம் ஒரு தங்கத்தாமரைதான்.

இவரோடத் தனித்தன்மை தமிழிசை பாடிய பல அன்பர்களின் பாடல்களை அன்பர்களிடத் கொண்டு வந்து சேர்ப்பதுதான். மிகவும் அருமையான சேவை செய்து வருகின்றார்.

சி. அ : தமிழ்மண நட்சத்திரமாகவும் மின்னுராரல்லப்பா ஜீவா அங்கிள் .

ஆமாம்மா. மூணு பேரும் சேர்ந்து அவருக்கும் வாழ்த்து சொல்லலாமா?

ஜீவா ஐயா! வாழ்த்துக்கள் வளர்க தங்கள் சேவை..
----------------------------------------------------------------------
சி. அ : அப்பா எனக்கு என்னமோ பட்சி சொல்லுது நீங்க இப்பவும் ஒரு மதுரைக்காரரை மனசுல நெனச்சுட்டு இருக்கறேங்கன்னு.

எந்த பட்சிம்மா அது

சி அ : கருட பட்சிதான் அதுதானே நல்லதுக்கெல்லாம் முன்னால வருது,
சரி சரி உன்னோட கருடன் சரியாத்தான் சொல்லியிருக்கு,

இவரு பேருலயே மதுரை இருக்கு.

பெ. அ : அப்ப மதுரையம்பதி சாரைப் பத்தி சொல்லப்ப் போறீங்களா?

அருமையான கண்டு பிடிப்பு அவரேதான்.

சி: அ "ஞாலம் நின்புகழேமிக வேண்டுந் தென் ஆலவாயில் உறையும் என் ஆதியே!" தான் இவரோட தலைப்புல வ்ர்ற வாசகம் கவனிச்சீங்களா அப்பா?

கரெக்டா கவனிச்சிருக்கறயே திருஞான சம்பந்தரோட அதே வாசகத்தைதான் ஐயாவும் தன்னோட கருப்பொருளா கொண்டிருக்காரு.

பெ அ : மதுரையம்பதி ஐயா எழுதற தீராத வல்வினை தீர்த்த குருவின் திரு உருக்கொண்டு ஆராத இன்பச் சுகாதீதம் நல்கினள் அம்பிகையேன்னு சொல்ற ஆச்சார்ய ஹ்ருதயம்பதிவு குருவின் அருமையைச் சொல்றது சூப்பரா.

சி. அ: ஐயாவோட சௌந்தர்ய லஹரி . பதிவை அனைவரும் கட்டாயமா படிக்க வேண்டிய ஒன்னு.

குமரன் சாரோட இனைஞ்சு இவர் ஸ்தோத்ர மாலை பதிவும் அருமையோ அருமை.

ஆதி சங்கர பகவத் பாதரின் சிவமானஸ பூஜாவிற்கு அருமையான விளக்கம் தந்திருக்கிறார் இப்பதிவுல மதுரையம்பதி ஐயா

பெ அ : புதுகைத் தென்றல் அம்மிணி இவருக்காக ஒரு தனிப்பதிவே போட்டாங்க, அதுலிருந்தே ஐயாவோட எழுத்தை எல்லாரும் தெருஞ்சுக்கலாம்.
மதுரையம்பதி ஐயா மதுரை மீனாள் அருளால் தாங்கள் இது போல சேவை செய்து வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.
---------------------------------------------------------------
பெ. அ : இதுவரை நாம பார்த்த அத்தனை பேரோடயும் சேர்ந்து எழுதற ஒருத்தரை நாம் இப்ப சொல்லலாமா?

சரி அவரு யாரு?

சி. அ : அப்பா விளையாடாதேங்க உங்களுக்கு தெரியாதா என்ன?

தெரியல்ல நீயே சொல்லுமா.

சி. அ : T. R. C, ... தி. ர. ச என்னு எழுதுற சந்திர சேகரன் இராமசாமி சார் தான் நம்மோட இப்போதய நாயகர்.

இவரும் கண்ணன் பாட்டு, சிவன் பாட்டு, முருகனருள், ஆச்சார்ய ஹ்ருதயம் எல்லாத்துலயும் எழுதறாரு.

பெ. அ : இவரு கௌசிகம் ன்னும் கம்பன் கவிச்சோலையில் பூத்த கவிமலர்கள் ரெண்டு வலைப்பூக்களையும் எழுதறாரு,

ஐயா தங்கள் சேவையும் மேலும் வளர்ந்து நல்ல மணம் பரப்ப வாழ்த்துகின்றோம்.
----------------------------------------------------



இப்பதிவில் மாவகிடண்ண கண்ணி பங்கனின் கிழக்கு முகமாம தத்புருஷ முகத்தின் தரிசனம் பெறுங்கள் அன்பர்களே.


தத்புருஷம் : யௌவன பருவமுடையதாய் கோகம்பூ நிறமாய் கிழக்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் வாயுவை குறிக்கின்றது, ஐந்தொழிலில் காத்தல் தொழிலை (தத்புருஷ கவச திரோபவ காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் 'வ", ஐயன் மகேஸ்வர வடிவம். அம்மை ஞான சக்தி வடிவம்.
இம்முகத்தை
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹ’ தந்நோ ருத்ர: ப்ரசோதயாத் என்னும் ப்ராக் வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதிக்கின்றோம்.



View of Holy Kailash ( South face and East face) from Astapath, the place where first thirthangara attained nirvana. The closest point to south face.






VIEW OF HOLY KAILASH FROM DARCHEN BASE CAMP

Unlike the other three faces we don't get the darshan of east face alone, mostly with south face only. This is because of the extension of east face to Dolma pass which lies on the parikrama route. In the following photos we will find the east face as sun lit side.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home