திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Tuesday, September 9, 2008

இன்னும் சில ஆன்மீகப்பதிவர்கள் -2



சிவலிங்கங்களில் எத்தனை வகை உண்டு. என்பதை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டுமா? அல்லது சிவலிங்கத்தை தேவர்கள் பூஜித்த ஸ்தலங்கள் எவை, விலங்குகள் பூஜித்த தலங்கள் எவை சென்று தெரிய வேண்டுமா?

நீங்கள் இதற்காக சொடுக்க வேண்டிய வலைப்பூ வினோத சிவலிங்கங்கள். இவ்வலைப்பூவின் ஆசிரியர் சண்முகவேலு ஞான சம்பந்தம் அவர்கள்.

வினோத சிவலிங்கள் பதிவில் இவர் " 1001 சிறுலிங்கங்கள் கொண்ட சகஸ்ர லிங்கம் இராமநாதபுரம் மாவட்டம் ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படும் திருஉத்ரகோசமங்கையில் உள்ளது" என்று ஆரம்பித்து பல அற்புத சிவலிங்கங்களைப்பற்றி அருமையாக எழுதியுள்ளார்.

விலங்குகள் பூசித்த சிவத்தலங்கள் தேவர்கள் பூஷித்த சிவத்தலங்கள் பற்றி அறிய கிளிக்கவும் sivanadiyars.blogspot.com. வலைப்பூவை ஆரம்பித்த இவர் தொடரவில்லை போல் தோன்றுகிறது. ஐயா அருமையான தொண்டை ஆரம்பித்திருக்கிறீர்கள் தொடருங்கள் என்று வலையுலக அன்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.


அடுத்து நாம் பார்க்கப்போவது ஒரு குழுப்பதிவு, பதிவர்கள் அனைவரும் அமெரிக்காவில் உள்ள நண்பர்கள். ஆன்மீகமும் தமிழும் இவர்களின் கண்களாக உள்ளன. இரண்டிற்க்காகவும் பல வலைப்பூக்களைப்படைத்து மணம் வீச செய்திருக்கின்றனர். அந்த அன்பர்கள்






ஆகிய மூவரே இந்த அன்பர்கள்.

முயற்சி திருவினையாக்கும எனப்து சத்யாவின் தாரக மந்திரம். இவரது கற்றது கைமண்ணளவு வலைப்பூவில் இவர் கூகுளின் புது உலாவியைப் பற்றி இப்படி பதிவிடுகிறார்.

"புரட்சி நாளைக்கு வருகிறது என்று இணையத்தை பத்துவைத்துவிட்டு இன்று மெதுவாக கூகிளாண்டவர் கடைசியில் ஒத்துக்கொண்டுவிட்டார். ஓய்ந்துபோயிருந்த இணைய உலவிச்சண்டையை ஆளுக்கு பாதியாக IEயும் FFம் பிரித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவரும் இவ்வினிய காலத்தில் குட்டையைக் குழப்ப கூகிள் தன்னுடைய Chrome எனும் உலவியை நாளை வெளியிடுகிறது.

சில முக்கிய அம்சங்களாவன
1. திறந்தவூற்று மென்பொருள்............................" தமிழரசன் மொக்கை போடாதோர் சங்கம் வலைப்பூவில் அருமையான பல கட்டுரைகளை எழுதி உள்ளார்.

" யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" என்பது முகவை மைந்தனின் ஊக்கச்சொல்.

மூவரும் சேர்ந்து உருவாக்கிய வலைப்பூதான் நான்காயிரம் அமுதத் திரட்டு
இதுவரை பன்னிரண்டு ஆழ்வார்களின் திருச்சரித்திரமும் இடப்பட்டுள்ளது. ஆழ்வார்களை இவர்கள் இவ்வாறு அறிமுகம் செய்கின்றனர்.

ஆயர்க் குல ஆதவனின் பேரருளைப் பெற நமக்குப் பேருதவியாய் இருந்த அந்த பன்னிரு ஆழ்வார்கள் என்னும் அவதார புருசர்களின் திருப்பெயர்கள் இதோ.

பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசையாழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவியாழ்வார்
குலசேகரஆழ்வார்
பெரியாழ்வார்
ஆண்டாள்
தொண்டரடிப்பொடியாழ்வார்
திருப்பாணாழ்வார்
திருமங்கையாழ்வார் ஆவர்.

இவர்கள் திருமாலின் பெயரில் நெக்குருக, நெஞ்சுருகப் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிரத்திவ்ய பிரபந்தம் ஆகும். ஆழ்வார்கள் அனைவரும் பாடியது அய்யன் பெருமாளின் பெயரில் மட்டுமே என்றாலும் அவை பாடப்பெற்ற காலங்கள் வேறு வேறு. வெவ்வேறு காலங்களில் இயற்றப்பெற்ற இப்பாசுரங்களைத் தொகுத்து நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்னும் பெயரில் நமக்கு அருளியவர் நாதமுனி ஆவார். இப்பாசுரத்தை நூல் என்று சொல்வதை விட பாடல்களின் தொகுப்பு என்னும் சொல்லே சாலப் பொருந்தும்.


இவர்களூடன்

Murali (முரளி)







நசரேயன்

ஆகியோர் இனைந்து எழுதும் வலைப்பூ மாம்பழச்சாலை ஒரு நட்புவட்டத்தின் தமிழ் வேட்கை. தமிழ் இலக்கிய திரட்டு, தமிழ் இலக்கியத்தின் ஒரு அற்புத பொக்கிஷம்.

திரைக் க்டல் ஒடி திரவிய்ம் தேடும் அன்பர்களே அங்கும் ஆன்மீகத்தையும் தாய் தமிழையும் மறவாத உங்களை வாழ்த்துகிறோம். வாழ்க பல்லாண்டு, தொண்டு தொடர்க.

___________________________________________

திருக்கயிலாய யாத்திரையின் CD/DVD/ புத்தகம் வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmail.com என்ற மின்னஞ்சலில் தங்கள் முகவ்ரியுடன் தெரிவித்தால் அனுப்பி வைக்கிறேன்.
* * * * *


எம்பெருமானின் காலடியிலிருந்து ஓடி வரும் நான்கு ஆறுகள் ஆசியா கண்டம் முழுவதையும் செழிப்பாக்குகின்றன, அவற்றில் ஒரு ஆறு


பார்வதித்தாயின் இருப்பிடம் டோல்மாவிலிருந்து

திருக்கயிலாய தரிசனம்

அன்னை மலைமகள் மரகத வல்லி

மீனாக்ஷி நீராடும் கௌரி குளம்

ஐயனின் முடியில் நாகம்



மலையரசன் பொற்பாவை கர்ப்பகிரகம் செல்லும் வழியில் கிடைக்கும் திருக்கயிலாய தரிசனம் கிழக்கு பகுதியின் நீட்சி.




ஓம் பர்வதம்

மலையில் இயற்கையாகவே பிரணவம் தெரிகின்றதா? ( தேவ நாகரி)

----------------------------------------------

இந்த மூன்று நாட்களும் தனியாக பதிவுகள் எழுத பெரிய அம்மணியும் , சின்ன அம்மணியும் கோபித்துக் கொண்டனர், அதன் விளைவு என்ன என்பதை அறிய நாளை வரை பொறுத்திருங்கள் அன்பர்களே.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home